வாகன சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல்

ராமநாதபுரம்,டிச.27: ராமேஸ்வரம், ராமநாதபுரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, திருவாடானை ஆகிய காவல் துணை கண்காணிப்பு அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் பெட்டிக்கடைகள் முதல் பெரிய வணிகம் வளாகம் வரையிலான கடைகள், கடைகளுக்குரிய குடோன்களில் போலீசார், சுகாதாரத் துறையினர், உணவு பாதுகாப்புத் துறையினர் கடந்த ஒரு மாதமாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கேணிக்கரை பகுதியில் எஸ்.ஐ சரவணன் தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த பாஸ்கரன்(58) என்பவர் டூவீலரில் வந்துள்ளார். டூவீலரை சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள 30 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் பாஸ்கரனை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்று அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக கடத்துதல், பதுக்கி வைத்து விற்பனை செய்தால், அபராதம் விதிப்பதுடன் கைது செய்தல் போன்ற சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடப்பட்டது.

The post வாகன சோதனையில் புகையிலை பொருட்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: