×

அண்ணாமலை போராட்டம் கேலிக்கூத்தாக உள்ளது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார், இது கேலிக்கூத்தாக உள்ளது ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். பதவிக்கு ஆபத்து, சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செய்தால் நல்லது என்று ஜோதிடர் யாரோ கூறியிருக்கிறார்கள். புதிய பதவி கிடைக்கும் என்று ஜோதிடர் சொன்னதால் அண்ணாமலை சாட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்தபோது அண்ணாமலை எங்கேசென்றார் என்ன செய்துகொண்டிருந்தார். பொள்ளாச்சி கொடுமை நடந்தபோது போராட்டத்தை மக்கள் நடத்தினார்கள். அப்போதும் நடவடிக்கை எடுக்கவில்லை. பா.ஜ.க.வினரே அண்ணாமலையின் இந்த போராட்டத்தை ஏற்பார்களா என்பது சந்தேகம். அரசியலுக்காக கேலிக்கூத்தான போராட்டத்தை அண்ணாமலை முன்னெடுத்துள்ளார். அண்ணாமலை செய்யும் வேடிக்கைகளில் இதுவும் ஒன்று.

பாலியல் குற்றவாளிகள் மீது இரும்புக்கரம் கொண்டு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி அண்ணாமலைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

 

The post அண்ணாமலை போராட்டம் கேலிக்கூத்தாக உள்ளது: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,DMK Organization ,R.S. Bharathi ,Chennai ,Annamalai… ,
× RELATED பொள்ளாச்சி சம்பவத்தின் போது...