×

பாக். நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடை நியாயமில்லை: பிரதமர் ஷெபாஸ் சாடல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் 4 நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடை நியாயமில்லாதது என்று அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் ஷெபாஸ், ‘‘பாகிஸ்தானில் நீண்ட தூரம் சென்று தாக்குதல் நடத்தும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள என்டிசி மற்றும் கராச்சியை சேர்ந்த அக்தர் அண்ட் சன்ஸ் பிரைவேட் லிமிடெட், அபிலியேட்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ராக்சைட் எண்டர்பிரைசஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் பொருளாதார தடையானது நியாயமற்றது. அணுசக்தி அமைப்பானது வலிய தாக்குவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பாகிஸ்தானுக்கு இல்லை. இது 100 சதவீதம் பாகிஸ்தானின் பாதுகாப்புக்கானது. இது மற்றவர்களுக்கான ஒரு எச்சரிக்கை. வேறு ஒன்றும் இல்லை. ஏவுகணை திட்டமானது பாகிஸ்தான் தன்னை தற்காத்துக்கொள்வதற்காக மட்டுமே” என்றார்.

The post பாக். நிறுவனங்களுக்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடை நியாயமில்லை: பிரதமர் ஷெபாஸ் சாடல் appeared first on Dinakaran.

Tags : Prime Minister Shehbaz Sharif ,Islamabad ,Pakistan ,Shehbaz Sharif ,US ,Shehbaz ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு லாலிபாப்! முன்னாள் வீரர் குமுறல்