×

பாக்.கிற்கு லாலிபாப்! முன்னாள் வீரர் குமுறல்

 

இஸ்லாமாபாத்: வரும் 2025ல் பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் விளையாட, தீவிரவாத பிரச்னைகளால் இந்தியா மறுத்தது. இந்தியாவின் கோரிக்கைப்படி இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்தில் அவை கலந்து கொள்ளும் போட்டிகளை நடத்துவதென சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முடிவு செய்தது.

அதற்கு பாக். கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டது. இதற்கு பாக். முன்னாள் கிரிக்கெட் வீரரான பாசித் அலி கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பொதுவான இடத்தில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை நடத்த ஒப்புக் கொண்டதன் மூலம், பாகிஸ்தானுக்கு லாலிபாப்பை, ஐசிசி தந்துள்ளது. இந்த முடிவு பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு தீங்கையே ஏற்படுத்தும்’ என அவர் கூறியுள்ளார்.

The post பாக்.கிற்கு லாலிபாப்! முன்னாள் வீரர் குமுறல் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Kumural ,Islamabad ,India ,Champions Trophy ,International Cricket Council ,ICC ,Dinakaran ,
× RELATED இந்திய போட்டிகள் பாகிஸ்தானில் நடக்காது: ஐசிசி அறிவிப்பு