×

துருக்கி ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து 11 பேர் பலி

இஸ்தான்புல்: வடமேற்கு துருக்கியின் பாலிகேசிர் மாகாணம் கரிசி நகரில் ராணுவ ஆயுதங்கள் மற்றும் ஆயுதங்களுக்கு தேவையான வெடிமருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று வழக்கம் போல் ஏராளமான தொழிலாளர்கள் ஆயுதம் மற்றும் வெடிமருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கட்டிடம் இடிந்து தரை மட்டமானதில் பணியில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

The post துருக்கி ஆயுத தொழிற்சாலையில் வெடிவிபத்து 11 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Istanbul ,Karsı ,northwestern Turkish ,Balikesir ,Dinakaran ,
× RELATED கடந்த 4 நாட்களாக துருக்கியில் தவித்த 400 விமான பயணிகள் மீட்பு