×

மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்: தங்கம் தென்னரசு

சென்னை: மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது, எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்த விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஒன்றியம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற பெரும் சாதனையைப் படைத்துள்ளார். அவர் இதுபோன்ற பல சாதனைகளைப் படைத்திட மனமார்ந்த வாழ்த்துகள்! இந்திய ஒன்றியத்தின் முன்னோடி மாநிலமாக எல்லாத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்து விளங்கிட, பெரும் பணியாற்றி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் , துணை முதலமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனை படைத்ததற்கு வாழ்த்துகள்: தங்கம் தென்னரசு appeared first on Dinakaran.

Tags : Mount Vinson ,Thangam Thennarasu ,Chennai ,Minister ,Muthamizha Selvi ,Mount Everest… ,
× RELATED எவரெஸ்ட் சிகரத்தை எட்டிய முதல் தமிழ்...