அரசியலில் திடீர் ஆர்வம்: அமெரிக்க அதிபர் ஆவாரா எலான் மஸ்க்? டிரம்ப் அதிரடி பதில்

வாஷிங்டன்: அமெரிக்காவின் அரிசோனா அடுத்த பீனிக்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சியில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பிடம், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக வரவாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிரம்ப் அளித்த பதிலில்,’ எலான் மஸ்க் என்னுடன் நெருக்கமாக இருப்பதால், இந்த கேள்வி எழுகிறது. அவர் அமெரிக்க அதிபராக ஆவதற்கு சாத்தியமில்லை. ஏனெனில் அவர் அமெரிக்காவில் பிறக்கவில்லை. அவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர் . அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி, அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர் அமெரிக்கக் குடிமகனாக இருக்க வேண்டும்’ என்றார்.

* பனாமா அரசை மிரட்டும் டிரம்ப்
சர்வதேச கப்பல்களின் வர்த்தம் மூலம் பணம் கொழிக்கும் பனாமா கால்வாய் குறித்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ‘பனாமா கால்வாய் வழியாக செல்லும் அமெரிக்க கப்பல்கள் மீது நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது. பனாமா கால்வாயால் வசூலிக்கப்படும் கட்டணம் அபத்தமானது. பனாமா கால்வாய் பாதுகாப்பான, திறமையான மற்றும் நம்பகமான முறையில் இயக்கப்படாவிட்டால், பனாமா கால்வாயை எங்களிடம் மீண்டும் திருப்பித் தர வேண்டும்’ என்றார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள பனாமா அதிபர் ஜோஸ் ரவுல் முலினோ, ‘பனாமா வழியாக செல்லும் அமெரிக்க கப்பல்கள் மீதான கட்டணங்கள் நிபுணர்களால் தீர்மானிக்கப்படுகின்றன. இந்த கால்வாய் எங்களுடையதாகவே இருக்கும்’ என்றார்.

The post அரசியலில் திடீர் ஆர்வம்: அமெரிக்க அதிபர் ஆவாரா எலான் மஸ்க்? டிரம்ப் அதிரடி பதில் appeared first on Dinakaran.

Related Stories: