- நிர்வாக குழு
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
- சென்னை
- கே
- நிர்வாகி திமுக
- ஸ்டாலின்
- திமுகா
- குழு
- சென்னை அண்ணா கல்வி கலை
- தின மலர்
சென்னை: கல்வித்துறைக்கு நிதி ஒதுக்க மறுப்பு, புயல் நிவாரண நிதி வழங்காமல் புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக தலைமை செயற்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார்.
இந்த கூட்டத்தில் பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, திமுக துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன் எம்பி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், அணிகளின் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
* அம்பேத்கரை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி பேரிடர் நிதி கோரி- அதில் அவசரமாக 2000 கோடி ரூபாய் பேரிடர் நிதியை முதல் கட்டமாக அளித்திடும்படி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்தும் தமிழ்நாட்டிற்கு ஏற்கனவே நிலுவையில் இருந்த மாநில பேரிடர் நிதியிலிருந்து 944.80 கோடி ரூபாய் வழக்கமான நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ளதே தவிர, பெஞ்சல் புயலுக்கு முதல்வர் கோரிய அவசரத் தொகை 2000 கோடியையோ அல்லது நிரந்தர மறுசீரமைப்புக்கான 6675 கோடி ரூபாயையோ இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்காமல் – தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு இந்த செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
* கூட்டாட்சி கோட்பாட்டிற்கும் – ஜனநாயகத்தின் வேர்களுக்கும் எதிரான மாநில உரிமைகளைப் பறிக்கும் நடைமுறை சாத்தியமற்ற “ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதாவை – ஏற்கனவே ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததிலிருந்து “நேர்மையான, சுதந்திரமான தேர்தலுக்கு” அதிகாரத்தின் துணை கொண்டு, அழிக்க முடியாத இழுக்கை ஏற்படுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, அவசர அவசரமாக கொண்டு வருவதற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
* “டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட ஒன்றிய பா.ஜ அரசும்” “அப்படி பறித்துக் கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த அதிமுகவும்” கைகோர்த்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்னையை மறைத்து கபட நாடகம் போடும் அதிமுகவிற்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
* தமிழ்நாட்டிற்கென சிறப்பான கல்விக் கொள்கை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், ஒன்றிய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்காத காரணத்தால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஒன்றிய அரசின் நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சிக்கும் பா.ஜ. அரசை இந்த செயற்குழு கடுமையாகக் கண்டிக்கிறது.
* தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளை தமிழர் பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும்.
* இலங்கை சிறையில் வாடும் தமிழ்நாட்டு மீனவர்களையும்-சிறை பிடிக்கப்பட்டுள்ள படகுகளையும் உடனே விடுதலை செய்திட வேண்டும். தமிழ்நாடு மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
* பெஞ்சல் புயலுக்கு முதல்வர் கோரிய அவசரத் தொகை 2000 கோடியையோ அல்லது நிரந்தர மறுசீரமைப்புக்கான 6675 கோடி ரூபாயையோ இதுவரை ஒன்றிய அரசு ஒதுக்காமல் – தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வருகிறது.
* ஒன்றிய பா.ஜ அரசும், அதிமுகவும் கைகோர்த்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்னையை மறைத்து கபட நாடகம் போடும் அதிமுகவிற்கும், பாஜ அரசுக்கும் திமுக செயற்குழு கண்டனத்தை தெரிவிக்கிறது.
The post கல்வித்துறைக்கு நிதி மறுப்பு: புயல் நிவாரண நிதியில் புறக்கணிப்பு ஒன்றிய அரசுக்கு திமுக செயற்குழு கண்டனம்; 12 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம் appeared first on Dinakaran.