×

பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி

மும்பை: பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி தடை விதித்துள்ளது. பிஎன்பி மெட்லைஃப் இந்தியா நிறுவனத்தின் உள்நடவடிக்கையை அறிந்து அதன் அடிப்படையில் பங்குகளை வாங்கி விற்றதால் தடை விதிக்கப்பட்டுள்ளது. 9 நிறுவனங்களும் பங்குகளை வாங்கி விற்று சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.21.16 கோடி லாபத்தையும் முடக்கியுள்ளது செபி

பிஎன்பி மெட்லைஃப் நிறுவனத்தின் ரகசிய உள் தகவலை அறிந்து பங்குகளை வாங்கி விற்றதாக 9 தரகர்கள், அமைப்புகள் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தரகர்கள் சச்சின் பாகுப் தக்லி, அவரது சகோதரர் தேஜாஸ் தக்லி, சந்தீப் சம்பர்க்கர், கவிதா சகா, ஜிக்னேஷ் நிகுல்பாய் டபி மற்றும் டிஆர்பிஎல், டபுள்யுடிபிஎல் நிறுவனங்களுக்கும் செபி தடை விதித்துள்ளது

பிஎன்பி மெட்லைஃப், இன்வெஸ்டெக் எந்த பங்குகளில் முதலீடு செய்ய உள்ளன என்ற ரகசிய தகவலை தரகர்கள் பெற்றுள்ளனர். இரு நிறுவனங்களும் வாங்க உள்ள பங்குகளை சந்தையில் 9 தரகர்களும் நிறுவனங்களும் வாங்கி விற்று லாபம் சம்பாதித்துள்ளனர். 2021 ஜனவரியிலிருந்து 2024 ஜூலை 19 வரை சட்டவிரோதச் செயலில் 9 பேரும் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டியுள்ளது.

The post பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது என்று 9 அமைப்புகளுக்குத் தடை விதித்துள்ளது பங்கு, பரிவர்த்தனை வாரியம் செபி appeared first on Dinakaran.

Tags : Board of Transactions Sebi ,Mumbai ,Stock and Exchange Board SEBI ,BNP MetLife India ,Dinakaran ,
× RELATED பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக்கூடாது...