மேலூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் வாயிலாக 352 வழக்குகளுக்கு தீர்வு

மேலூர், டிச. 16: மேலூர் நீதிமன்றத்தில் செயல்படும் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடைபெற்ற லோக் அதாலத் வாயிலாக 352 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. முதன்மை மாவட்ட நீதிபதி உத்தரவின்படி, மேலூர் நீதிமன்றத்தில் தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மேலூர் சார்பு நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான சாமுண்டீஸ்வரி பிரபா, மாவட்ட உரிமையியல் நீதிபதி முத்துக்கிருஷ்ண முரளிதாஸ் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இந்த மக்கள் நீதிமன்றத்தில், சார்பு நீதிமன்றம், மேலூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், நடுவர் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்குகளில் 380 எடுக்கப்பட்டு இரு தரப்பினருக்கும் இடையே விசாரணை நடைபெற்றது. இதன் முடிவில் 352 வழக்குள் முடித்து வைக்கப்பட்டன. இதன் வாயிலாக வழக்கு தாக்கல் செய்தோருக்கு ரூ.45 லட்சத்து 72 ஆயிரத்து 900 சமரச தொகையாக பெற்றுத்தரப்பட்டது.

The post மேலூர் நீதிமன்றத்தில் லோக் அதாலத் வாயிலாக 352 வழக்குகளுக்கு தீர்வு appeared first on Dinakaran.

Related Stories: