இங்கு அன்னபூர்ணேஸ்வரி, மகிஷாசுரமர்த்தினி ஆகிய 2 கோயில்கள் அமைந்துள்ளன. இந்த கோயில்களில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இன்று தினம் காலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து கணபதி ஹோமத்துடன், அம்மனுக்கு விஷேச அபிஷேக பூஜைகள், அலங்கார பூஜைகள் ஆகியவை நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து ஸ்ரீ வேலி பூஜைகள், உச்சிக்காலப் பூஜைகள் நடக்கிறது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. அம்மன் கோயில்களின் சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான கார்த்திகை தீபங்கள் பக்தர்கள் ஏற்றி வழிபடுகின்றனர். மேலும் கார்த்திகை தீபத்திருநாளில் கோவில்களுக்கு பாலக்காடு, சித்தூர், தத்தமங்கலம், கொடும்பு, கொழிஞ்சாம்பாறை, தமிழகம் பொள்ளாச்சி, கோவை ஆகிய இடங்களை சேர்ந்த மக்கள் திரண்டு வருகை தருவர். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோயிலில் சுற்றுப்பிரகாரத்தில் அமைந்துள்ள கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிப்பாடுகள் செலுத்தி தரிசனம் செய்து பக்தி பரவசமடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.
The post கொடும்பு திருவாலத்தூர் இரண்டு மூர்த்தி பகவதி கோயிலில் இன்று கார்த்திகை தீபத்திருவிழா appeared first on Dinakaran.