×

குருவாலப்பர்கோயில் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம்

 

ஜெயங்கொண்டம், டிச. 13: ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக இளைஞரணி செயலாளர், துணை முதலமைச்சர்உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் மற்றும் முதலமைச்சரின் திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம் குருவாலப்பர்கோவில் கிராமத்தில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் மணிமாறன தலைமை வகித்தார். முன்னதாக ஒன்றிய பொருளாளர் முல்லைநாதன் வரவேற்றார்.

தலைமைக் கழக சொற்பொழிவாளர் சேலம் சுஜாதா, தலைமைக்கழக இளம் பேச்சாளர் தினேஷ், கழக சட்டதிட்ட திருத்தக்குழு இணைச்செயலாளர் சுபா.சந்திரசேகர் ,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் குலோத்துங்கன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுபா வசந்தபகலவன் மற்றும் மாவட்ட அணி நிர்வாகிகள், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றியக்கழக நிர்வாகிகள், கழகத்தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியில் கிளைக்கழக செயலாளர் ரவி நன்றி கூறினார்.

The post குருவாலப்பர்கோயில் கிராமத்தில் அரசின் சாதனை விளக்க பிரச்சார கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Kuruvalaparkoil ,Jayangondam ,ASSEMBLY CONSTITUENCY ,SOUTH UNION DIMUKA ,DIMUKA ,YOUTH SECRETARY, DEPUTY CHIEF MINISTERAND ,MINISTER ,STALIN ,DIRAVITA ,GURUWALAPARGA ,Achievement Campaign Meeting ,Guruvalaparkoil ,Dinakaran ,
× RELATED பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு போக்குவரத்து விதிகள் விழிப்புணர்வு கூட்டம்