மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கலைஞர் வீடு: அமைச்சர் பேட்டி

நெல்லை: நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேரு நேற்று காலை கலெக்டர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா மற்றும் அரசுத் துறை அதிகாரிகளுடன் மாஞ்சோலை சென்று தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி: மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வீடு கட்டித் தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். கலெக்டர், டிஆர்ஓ, தாசில்தார் என அதிகாரிகள் முகாம் நடத்தி அதற்கான திட்டத்தை வகுத்து எங்கு வீடு வேண்டும் என்று கேட்கிறார்களோ அங்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படும். தமிழ்நாடு முதல்வரின் அனுமதியை பெற்று கலைஞரின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் வீடு கட்டித் தர ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

The post மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு கலைஞர் வீடு: அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: