சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து

 

நத்தம், டிச.12: சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (40). இவர் அங்கிருந்து அய்யப்ப பக்தர்களை காரில் ஏற்றிக் கொண்டு சபரிமலைக்கு சென்று விட்டு நத்தம் வழியாக காரில் நேற்று முன் தினம் இரவு, ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தம் அருகே சேர் வீடு மேம்பாலம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆறுமுகம் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சாலை தடுப்புச் சுவரில் கார் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: