×

புகையிலை விற்ற வாலிபர் கைது

 

ஈரோடு, டிச. 12: அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஈரோடு டவுன் போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பழைய பூந்துறை ரோடு பகுதியில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள சர்ச் ஒன்றின் அருகில் உள்ள மளிகை கடையில் சோதனையிட்டபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களான பான் மசாலா, குட்கா ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், கடை உரிமையாளரான ஈரோடு, கச்சேரி வீதியைச் சேர்ந்த ஷாஜகான் (32) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1,750 மதிப்பிலான 1 கிலோ 330 கிராம் புகையிலை பொருள்களையும் பறிமுதல் செய்தனர்

The post புகையிலை விற்ற வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Town Police ,Old Poonthurai Road ,Dinakaran ,
× RELATED ஆண் சடலம் மீட்பு