×

ஜவுளி வணிக வளாகத்தில் வாரச்சந்தை கடைகள் அமைக்க மனு

 

ஈரோடு, டிச. 11: ஈரோட்டில் ஜவுளி வணிக வளாகத்தில் வாரச்சந்தை கடைகள் அமைத்து தரக்கோரி வியாபாரிகள் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். ஈரோடு கனிமார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையர் மணீஷிடம் மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறயிருப்பதாவது:

ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் தென் மாநில அளவில் புகழ்பெற்ற கனிமார்க்கெட் வாரச்ச்நைத கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த 2019ம் ஆண்டு கனிமார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் அமைப்பதற்காக, வாரச்சந்தையில் இயங்கி வந்த 720 கடைகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. புதிதாக ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டது.

அப்போது, தினசரி ஜவுளி கடைகளும், வாரச்சந்தைக்கான கடைகளும் மீண்டும் அமைக்கப்படும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. தற்போது, ஜவுளி வணிக வளாகத்தில் தினசரி ஜவுளி கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் ஜவுளி வணிக வளாகத்தில் வாரச்சந்தை அமைப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, வாரச்சந்தை கடைகள் அமைத்து தர மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

The post ஜவுளி வணிக வளாகத்தில் வாரச்சந்தை கடைகள் அமைக்க மனு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode Ganimarket Weekly Market All Textile Traders Association ,President ,Selvaraj ,Dinakaran ,
× RELATED ஆண் சடலம் மீட்பு