- modakurichi
- தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம்
- யூனியன்
- ஜனாதிபதி
- அருள் மாணிக்கம்
- மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்
- தின மலர்
மொடக்குறிச்சி, டிச.12: மொடக்குறிச்சியில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக நடந்த ஒன்றிய தலைவர் அருள் மாணிக்கம் தலைமை தாங்கினார். சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கோமதி கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் 70 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி பட்டியலுடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்க வேண்டும். அரசு காலி பணியிடங்களின் கல்வி தகுதியின் அடிப்படையில் 50 சதவீதம் நிரப்ப வேண்டும். ஓய்வுபெறும் வயதை 60-ல் இருந்து 62 ஆக உயர்த்த வேண்டும்.
சத்துணவு மையங்களில் எரிவாயு சிலிண்டர்களை அரசை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் மூர்த்தி, மாவட்ட துணைத்தலைவர் செல்வி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி, ஓய்வுபெற்ற முன்னாள் செயலாளர்கள் ஜான் சுந்தரம், ஆறுச்சாமி ஆகியோர் பேசினர். சங்க முன்னணி நிர்வாகிகள் செல்வி, மைதிலி, சரண்யா, பிரியா, தங்கமணி, திலகவதி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய பொருளாளர் பாரதி நன்றி கூறினார்.
The post சொட்டு நீர் குழாய்கள் அமைக்கும் பணி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.