×

பள்ளி மாணவர் மாயம்

 

ஈரோடு, டிச. 12: ஈரோடு மாவட்டம், நம்பியூர், கோவை மெயின் ரோடு, பொன் நகர் 5வது வீதியை சேர்ந்தவர் சிவகுமார் (50). இவரது மகன் யோகித் (18). இவர், நம்பியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கைப்பந்து விளையாட்டு வீரராக உள்ள யோகித் கடந்த 4 நாட்களாக திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு விட்டு, கடந்த 9ம் தேதி மாலையில் வீட்டுக்கு வந்தார்.

சிறிது நேரத்தில் மீண்டும் நம்பியூர் கடைவீதிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் இரவு வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதையடுத்து, தந்தை சிவகுமார் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து நேற்று முன்தினம் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான மாணவர் யோகித்தை தேடி வருகின்றனர்.

The post பள்ளி மாணவர் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Sivakumar ,Pon Nagar 5th Street, Coimbatore Main Road, Erode District ,Yogith ,Nambiur ,mayam ,
× RELATED ஆண் சடலம் மீட்பு