×

காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு ஆப்கன் அமைச்சர் ஹக்கானி பலி

காபூல்: ப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பில் தலிபான் அகதிகளுக்கான அமைச்சர் கலீல் ரஹ்மான் ஹக்கானி பலியானார். காபூலில் உள்ள தலிபான் அகதிகளுக்கான அமைச்சரக கட்டிடத்தில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இதில், கலீல் ஹக்கானி மற்றும் 6 பேர் பலியானார்கள் என்று தலிபான் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளாார். ஆனால், ஆப்கானிய அரசு அதிகாரிகள் எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு குண்டுவெடிப்பில் முக்கிய பிரமுகர் ஒருவர் பலியாவது இதுவே முதல்முறையாகும்.

The post காபூலில் பயங்கர குண்டுவெடிப்பு ஆப்கன் அமைச்சர் ஹக்கானி பலி appeared first on Dinakaran.

Tags : minister ,Haqqani ,Kabul ,Taliban ,Minister for Refugees ,Khalil Rehman Haqqani ,Pakistan ,Khalil Haqqani ,Dinakaran ,
× RELATED ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட...