காசா: நிவாரண பொருட்கள் ஏற்றப்பட்ட வாகனங்களுக்கு இஸ்ரேல் ராணுவம் தடை விதித்துள்ளதால் காசா முழுவதும் உணவு பஞ்சம் மிக கடுமையாக அதிகரித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு நாடுகள் அளித்த உணவு பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகள் காசாவுக்குள் செல்ல இஸ்ரேல் பாதுகாப்புப்படை அனுமதி மறுத்துள்ளது. இதனால் சர்வதேச அமைப்புகள் உணவு பொருள் விநியோகிப்பதை நிறுத்தி விட்டதால் பாலஸ்தீன மக்களின் முக்கிய உணவு ஆதாரமான சப்பாத்தி மாவுக்கு காசா முழுவதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வீடுகளில் மாவு இருப்பு கரைந்து விட்டதால் சப்பாத்தி விற்பனை செய்யும் கடைகளை ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிடுகின்றனர். இதனால் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பதும் காசாவில் தொடர்ந்து வருகிறது. பல மணிநேர காத்திருப்புக்கு பின்பு சிலருக்கு மட்டுமே ஒரு சில சப்பாத்திகள் கிடைக்கின்றன. ஆனால் பெரும் பசியுடன் கால்கடுக்க வரிசையில் காத்திருந்த பலர் வெறும் கையுடன் வீடு திரும்பும் அவலமும் காசாவில் அரங்கேறி வருகிறது. மாவு தட்டுப்பாடு எதிரொலியாக காசாவில் உணவு பண்டங்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், செய்வதறியாமல் புலம் பெயர்ந்த பாலஸ்தீன மக்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
The post காசா முழுவதும் உணவுப் பஞ்சம் பன்மடங்கு அதிகரிப்பு: சப்பாத்தி மாவு வாங்க கடைகளை முற்றுகையிடும் நூற்றுக் கணக்கான மக்கள்! appeared first on Dinakaran.