நிலக்கோட்டை அருகே வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை

நிலக்கோட்டை, டிச.11: நிலக்கோட்டை அருகே தொட்டாம்பட்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிககள் பூமிபூஜைகளுடன் தொடங்கின. நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தொட்டாம்பட்டி கிராமத்தில் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் 2023-2024ம் ஆண்டுக்கான ஒன்றிய பொது நிதி ஐந்து இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு மூன்று லட்ச ரூபாய் மதிப்பில் காளியம்மன் கோவில் வளாகத்தில் சிமெண்ட் தளம் அமைத்தல், இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் நாடகமேடை மராமத்து பணிசெய்தல் உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு ஒன்றிய கவுன்சிலர் பொறியாளர் ராஜதுரை தலைமையில் பூமிபூஜை போட்டு பணிகள் துவக்கி வைக்கப்பட்டது. இதில் வார்டு உறுப்பினர்கள் வேல்முருகன், லட்சுமணன், சின்னராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post நிலக்கோட்டை அருகே வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு பூமிபூஜை appeared first on Dinakaran.

Related Stories: