சைபர் குற்றங்கள், காலநிலை மாற்றம் மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தல்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கருத்து

புதுடெல்லி: சர்வதேச மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. மனித உரிமைகள் தினத்தையொட்டி தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் டெல்லியில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பேசியதாவது: நாம் எதிர்காலத்திற்காக முன்னேறும்போது வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்கிறோம்.

சைபர் குற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தல்கள்.டிஜிட்டல் சகாப்தம் உருமாறும் அதே வேளையில் இணைய மிரட்டல், ஆழமான போலி தனியுரிமை கவலைகள் மற்றும் தவறான தகவல்களை பரப்புதல் போன்ற சிக்கலான பிரச்னைகளை கொண்டு வந்துள்ளது. மேலும் பாதுகாப்பான மற்றும் சமமான டிஜிட்டல் சூழலை வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு இப்போது நமது அன்றாட வாழ்க்கையில் நுழைந்துள்ளது. பல சிக்கல்களை தீர்க்கின்றது. மேலும் புதிதாக பல சிக்கல்களையும் உருவாக்குகின்றது. எனவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்” என்றார்.

The post சைபர் குற்றங்கள், காலநிலை மாற்றம் மனித உரிமைகளுக்கு புதிய அச்சுறுத்தல்: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கருத்து appeared first on Dinakaran.

Related Stories: