மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்!!

சென்னை: மதுரையில் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார். அப்போது, மதுரை புறநகர் பகுதியில் ரூ.2,000 கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ.1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு மழைநீர் வடிகால்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

The post மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்!! appeared first on Dinakaran.

Related Stories: