×

அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

 

திருமூர்த்தி மலைக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் போதுமான கழிப்பறைகள் இன்றி அவதிக்குள்ளாகினர்.மேலும் பேருந்துகளில் குழுவாக வந்திருந்த ஐயப்ப பக்தர்கள் அமர்ந்து உணவு உண்ண போதுமான இடவசதியும், குடிநீர் மற்றும் கை கழுவும் இடம் இல்லாததால் அடிப்படை வசதியின்மையால் மிகவும் சிரமம் அடைந்தனர்.சுற்றுலாத்துறை சார்பில் நவீன கட்டண கழிப்பிடங்கள், குளியலறைகள் உடைமாற்றும் அறை மற்றும் உணவு கூடம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Ayyappa ,Tirumurthi Hill ,
× RELATED ஆரன்முளாவில் இருந்து சபரிமலைக்கு...