மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களை கைப்பற்றி பா.ஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. இந்தியா கூட்டணியால் மொத்தமாக 46 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 2 வாரங்களுக்கு பின்னர், பாஜ தலைவர் பட்நவிஸ் புதிய முதல்வராக கடந்த 5ம் தேதி பதவியேற்றார். கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஏக்நாத் ஷிண்டேவும், அஜித்பவாரும் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர்.

இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற 288 புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பதற்காக சட்டப்பேரவையின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஆனால் எதிர்க்கட்சியினர் எம்எல்ஏ பதவியேற்பு விழாவை புறக்கணித்தனர். தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்து பா.ஜ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சியினர், சட்டப்பேரவையின் முதல்நாளில் எம்எல்ஏக்களாக பதவியேற்க மறுத்துவிட்டனர்.

The post மகாராஷ்டிர சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பை புறக்கணித்த எதிர்க்கட்சிகள் appeared first on Dinakaran.

Related Stories: