×

திடீர் கேள்வியால் பரபரப்பு மேற்குவங்க அரசியலில் மம்தாவின் வாரிசு யார்?

கொல்கத்தா: மேற்குவங்க அரசியலில் மம்தாவின் வாரிசு யார் என்ற கேள்வியால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறுகையில், ‘எனக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை யார் வழிநடத்துவார்கள்? என்ற கேள்வியை முன்வைக்கின்றனர். எங்களது கட்சி மிகவும் கட்டுக்கோப்பான கட்சி. எந்தவொரு நபரும் கட்சியின் விதிமுறைகளை மீறி உத்தரவுகளை பிறப்பிக்க முடியாது.

மக்களுக்கு எது சிறந்தது என்பதை கட்சி முடிவு செய்யும். ஒவ்வொரு தலைவரும் அவரவர் நிலையில் தனித்துவமானவர்களாக உள்ளனர். இன்றைய இளைஞர்கள் நாளைய மூத்த தலைவர்களாக உருவெடுக்கிறார்கள்’ என்றார். இருந்தாலும் தனது அரசியல் வாரிசாக எவரது பெயரையும் மம்தா தெரிவிக்கவில்லை. அதேநேரம் மம்தாவின் உறவினரான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரசின் தேசிய பொதுச் செயலாளராகவும், எம்பியாகவும் உள்ளார். அவரே கட்சி மற்றும் ஆட்சி அதிகாரத்தில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.

The post திடீர் கேள்வியால் பரபரப்பு மேற்குவங்க அரசியலில் மம்தாவின் வாரிசு யார்? appeared first on Dinakaran.

Tags : Mamata ,West Bengal ,Kolkata ,Chief Minister ,Trinamool Congress ,Mamata Banerjee ,Trinamool Congress party ,
× RELATED அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்