×

அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

கொல்கத்தா: அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அமித் ஷாவின் பேச்சு பாஜகவின் தலித் எதிர்ப்பு மனநிலையை காட்டுகிறது. வெறுப்பையும், மதவெறியையும் உள்வாங்கிய ஒரு கட்சியிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?, ஜனநாயகத்தின் கோயிலாக திகழும் நாடாளுமன்றத்தில் அமித் ஷா தனது கருத்துகளால் அம்பேத்கரை களங்கப்படுத்தி உள்ளார். இந்தியாவுக்காக அம்பேத்கரின் பங்களிப்பை முற்றிலும் அழித்து, வரலாற்றையே மாற்றி எழுதியிருப்பார்கள் என்று கூறினார்.

The post அமித் ஷாவுக்கு மம்தா பானர்ஜி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mamata Banerjee ,Amit Shah ,Kolkata ,West Bengal ,Chief Minister ,Home Minister ,Ambedkar ,Dalit ,BJP ,
× RELATED அம்பேத்கார் பற்றி அமித் ஷா சர்ச்சை பேச்சு.. மும்பையில் விபிஏ போராட்டம்