×

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத் திட்டப் பணிகளைத் தொடங்காதது ஏன்?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: தூத்துக்குடி வ.உ.சி துறைமுக வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத்தின் திட்டப் பணிகளை தொடங்காதது ஏன்? என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில், ஒன்றிய துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும் மத்திய சென்னை எம்பியுமான தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி:
* தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வெளிவட்ட சரக்குப் பெட்டக முனையத் திட்டத்தின் தற்போதைய நிலை?

* திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்கள் ஆன நிலையில், அதன் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது நிறைவடையும் என்ற கால வரையறையுடன் தெரியப்படுத்தவும்.

* வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதியின் முக்கிய சரக்கு மாற்று மையமாக மாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை அல்லது முன்மொழியப்பட்டுள்ள திட்டங்கள் என்ன?

* வ.உ.சி. துறைமுகப் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதியின் தற்போதைய நிலை என்ன? மேலும் அத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் எந்தளவு பயன்படுத்தப்பட்டுள்ளது?

* தேசிய அனல் மின் கழகம் தூத்துக்குடி துறைமுகத்தில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதிக்கான பணிகளைத் தொடங்கிவிட்டதா?

* நாட்டில் மேற்கொள்ளப்பட்டுவரும் வெளிவட்ட துறைமுக சரக்குப் பெட்டக முனையம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி வசதி போன்ற பெரிய திட்டங்களால் ஏற்படும் சுற்றுசூழல் பாதிப்பை கண்காணிக்கவும் அவற்றை குறைக்கவும் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என்ன? எனவும் கேள்வி எழுப்பினார்.

The post தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின் சரக்குப் பெட்டக முனையத் திட்டப் பணிகளைத் தொடங்காதது ஏன்?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Tags : Thoothukudi V. U. C. ,Thayanidhi Maran M. B. ,New Delhi ,Thoothukudi Va ,U. ,Malakawailai ,Thayanidhi Maran M. B ,Lalakawa ,Parliamentary Committee of the Union ,Union Ministry of Ports, Shipping and Waterways ,Thoothukudi Va. ,U. C. ,Dinakaran ,
× RELATED ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில்...