×

ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘வித்யாலட்சுமி’ கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்படுமா?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி

புதுடெல்லி: தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் மட்டும் பயன்பெறும் வகையில் உள்ள வித்யாலட்சுமி கல்விக்கடன் திட்டமானது, கிராமப்புற, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் எப்போது விரிவாக்கம் செய்யப்படும் என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி எழுப்பினார். மக்களவையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், மத்திய சென்னை எம்.பி.யுமான தயாநிதி மாறன் கேட்ட கேள்விகள் வருமாறு: நாட்டின் தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்கள் மட்டும் பயன்பெறுகிற வகையில் உள்ள வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டத்தை, கிராமப்புற, 2ஆம் மற்றும் 3ஆம் கட்ட நகரங்களின் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்ய ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன?

இத்திட்டம் எப்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்றும், தற்போது நிதி சிரமங்களில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் தற்காலிகமாக உதவும் வகையில் ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்றும், அவ்வாறெனில் அதன் விவரங்களைத் தெரியப்படுத்தவும் எனக் கேள்வி எழுப்பினார். இத்திட்டத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு, மாணவர்களின் சேர்க்கை மற்றும் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் ஏதேனும் குறிப்பிட்ட அளவுகோல்கள் பயன்படுத்தபடுகின்றனவா? பட்டப்படிப்பை முடித்த பின்னும் நிதி சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு கடனைத் திருப்பி செலுத்துவதை எளிதாக்கவோ அல்லது, அவர்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கவோ ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா? இத்திட்டத்தின் நிலைத்தன்மையை ஒன்றிய அரசு எவ்வாறு உறுதி செய்கிறது என்றும், வருங்காலங்களில் பயனாளிகள் அதிகரிக்கும்போது, அதற்கேற்ப இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை அதிகரிக்க ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா என்றும் கேள்வி எழுப்பினார்.

The post ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் ‘வித்யாலட்சுமி’ கல்விக் கடன் திட்டம் விரிவுபடுத்தப்படுமா?.. மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி appeared first on Dinakaran.

Tags : Thayanidhi Maran M. B. ,New Delhi ,Vidyalakshmi Education ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தின்...