100 நாள் காசநோய் ஒழிப்பு திட்ட பிரச்சாரம்: ஒன்றிய அரசு நடவடிக்கை


புதுடெல்லி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் 100 நாள் காசநோய் ஒழிப்பு திட்ட பிரசாரத்தை தொடங்க உள்ளதாக ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒன்றிய சுகாதார துறை அமைச்சகமானது முக்கிய நிறுவனங்களுடன் இணைந்து காசநோய் ஒழிப்பதற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. 33 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 347 மாவட்டங்களில் 100 நாட்கள் ,இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா அரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் இன்று பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்தியாவில் காசநோய் இறப்பு சவால்களை எதிர்கொள்ளவும், நோய் பாதிப்பை கண்டறிவதை மேம்படுத்தவும், தாமதங்களை குறைக்கவும், சிகிச்சை விளைவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு இந்த பிரசாரத்தை அரசு தொடங்குகின்றது.

The post 100 நாள் காசநோய் ஒழிப்பு திட்ட பிரச்சாரம்: ஒன்றிய அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: