×

தாராபுரம் நகராட்சி பள்ளியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்படும் நுழைவுவாயில்

 

தாராபுரம், டிச.7: தாராபுரம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.15 லட்சத்தில் நுழைவு வாயில் கட்டும் பணியை நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் துவக்கி வைத்தார். நகராட்சி மேல்நிலைப்பள்ளி முகப்பு நுழைவு வாயில் சிதிலமடைந்து இடிந்து விழுந்ததால் இதற்கு பதிலாக ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஒரு வளைவு நுழைவுவாயில் கட்ட நகர் மன்றத்தில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து அதன் கட்டுமான பணிக்கான துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, தாராபுரம் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமை வகித்து பணிகளை துவக்கி வைத்தார். இதில், பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன், நகராட்சி பொறியாளர் சுகந்தி, நகரக்கழக செயலாளர் முருகானந்தம், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், நகர துணை செயலாளர் சீனிவாசன், பிலோமினா, தவச்செல்வன், நகர்மன்ற உறுப்பினர்கள் யூசுப், உமா மகேஸ்வரி, புனிதா, முத்துலட்சுமி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பர்கத் நிஷா, ஜீவா மயில்சாமி, உட்பட பலர் கலந்து கொண்டனர்

The post தாராபுரம் நகராட்சி பள்ளியில் ரூ.15 லட்சத்தில் கட்டப்படும் நுழைவுவாயில் appeared first on Dinakaran.

Tags : Tarapuram Municipal School ,Tharapuram ,Town Council ,Pappu Kannan ,Tarapuram Municipal High School ,Municipal High School ,
× RELATED ‘எனக்கு சமமாக சேரில் அமர்ந்து டீ...