×

திருப்பூர் வெங்கமேட்டில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம்

 

திருப்பூர், டிச. 7: முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் நூலகம் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கான கலைஞர் நூலகம் திருப்பூர் வெங்கமேட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா திருப்பூர் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஈ.தங்கராஜ் தலைமை தாங்கினார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமர், தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதில் 15 வேலம்பாளையம் பகுதி செயலாளர் ராமதாஸ், தெற்கு மாநகர இளைஞரணி அமைப்பாளர் ராஜு, வடக்கு ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பெரியார் காலனி மணி, 9வது வட்ட செயலாளர் ஸ்ரீதர், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, தம்பி கோவிந்தராஜ், மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரேமலதா கோட்டாபாலு, ராதாகிருஷ்ணன், வேலம்மாள் காந்தி, செந்தில்குமார் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மற்றும் பகுதி அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்பூர் வெங்கமேட்டில் வடக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் appeared first on Dinakaran.

Tags : Artist Library ,Northern District Youth ,Tirupur ,Vengamed ,Chief Minister ,M. Karunanidhi ,Tamil Nadu ,Artist Library for Tirupur North Assembly Constituency ,Tirupur Vengamed ,Tirupur North ,Artist Library in ,North ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!