சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் உ.பி காங்கிரஸ் கமிட்டி கலைப்பு: பொதுச்செயலாளர் அறிவிப்பு

புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் மாநில காங்கிரஸ் அமைப்புகள் கலைக்கப்படுவதாக காங்கிரஸ் பொது செயலாளர் அறிவித்துள்ளார். கடந்த லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் 6 இடங்களை வென்றது. இதன் மூலம் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்தது. கடந்த 2019 தேர்தலில் காங்கிரசால் 1 இடத்தை மட்டுமே பெற்ற நிலையில், தற்போது 6 இடங்களை கைப்பற்றியதால் கட்சியினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில், மாநில அமைப்பில் காங்கிரஸ் தேசிய தலைமை மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவின்படி, உத்தரபிரதேச காங்கிரஸ் கமிட்டி, மாவட்ட, வட்ட உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் நிர்வாக அமைப்பும் கலைக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். மாநில காங்கிரசை பலப்படுத்தும் வகையிலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் அனைத்து பிரிவுகளும் கலைக்கப்பட்டதாக மூத்த தலைவர்கள் கூறினர். விரைவில் புதிய நிர்வாகிகள் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறினர்.

The post சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால் உ.பி காங்கிரஸ் கமிட்டி கலைப்பு: பொதுச்செயலாளர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: