சென்னை: புரசைவாக்கம் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் வளாகத்தில் புதிய சூப்பர் ஜூவல்லரியை அதன் நிறுவனர் ராஜரத்னம் திறந்து வைத்தார். சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் தி.நகர், புரசைவாக்கம், போரூர், குரோம்பேட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூரில் மக்களுக்கு அன்றாட தேவையான அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யும் அங்காடிகளை நிறுவி, தமிழகத்தின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முறையாக போரூர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் ஆடைகளுடன், தங்கம் மற்றும் வைர நகைகளை விற்பனை செய்யும் சூப்பர் ஜூவல்லரி ஒருங்கிணைந்து திறக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து, ரங்கநாதன் தெரு, குரோம்பேட்டை, மதுரை மாட்டுத்தாவணி மற்றும் கோவை ஓப்பணக்கார வீதி சரவணா ஸ்டோர்ஸில் சூப்பர் ஜூவல்லரி திறக்கப்பட்டன. தற்போது புரசைவாக்கத்திலும் ஒருங்கிணைந்த சூப்பர் ஜூவல்லரி திறக்கப்பட்டுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் ராஜரத்னம் சூப்பர் ஜூவல்லரியை திறந்து வைத்தார். விழாவில் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் குழும நிர்வாக இயக்குனர் சபாபதி, ரேவதி ராஜரத்னம், சுனிதா சபாபதி இயக்குனர்கள் ரோஷன் ஸ்ரீரத்னம், யோகேஷ் ஸ்ரீரத்னம், சப்ளையர்கள் மற்றும் திரளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த புதிய ஜூவல்லரியில் இன்றைய தங்க மற்றும் வைர ஆபரண அணிகலன்களின் டிரண்டிங் டிசைன்ஸ் அனைத்தும் விற்பனைக்காக அறிமுகப்படுத்தபட்டுள்ன. திறப்பு விழா சலுகையாக (வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 4 தினங்கள் மட்டும்) பவுனுக்கு ரூ2000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. வைர நகைகள் காரட்டுக்கு ரூ25,000 குறைவாகவும் தாலி செயின் மற்றும் தங்க நாணயங்கள் சேதாரமின்றி, சந்தை விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸில் புதிய சூப்பர் ஜூவல்லரி; நிறுவனர் ராஜரத்னம் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.