துறையூர் அருகே பெண்ணை தாக்கி 9 பவுன் பறிப்பு

துறையூர், டிச.5: துறையூர் அருகே தனியாக இருந்த பெண்ணிடம் 9 பவுன் தங்கச் செயினை பறித்து விட்டு டூவீலரில் தப்பிச் சென்ற இரண்டு இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், பூவிளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர்(55). இவரது மனைவி பொன்மலர்(50). இவர்கள் துறையூர் அருகே சர்பிடி தியாகராயர் நகர் பகுதியில் பட்டி அமைத்து ஆடு மேய்த்து வருகின்றனர். நேற்று காலை ராமர் ஆடு மேய்க்க சென்று விட்டார்.  பொன்மலர் மட்டும் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு டூவீலரில் சென்று 2 இளைஞர்கள் பொன்மலர் கழுத்திலிருந்த 9 பவுன் தங்கச் செயினை பறித்தனர்.

அப்போது சத்தம்போட்டு அவர்களிடம் மல்லுக்கட்டிய பொன்மலரின் தலையில் அவர்கள் தாக்கி விட்டு டூவீலரில் தப்பி சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த பொன்மலரை அருகிலிருந்தவர்கள் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக துறையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post துறையூர் அருகே பெண்ணை தாக்கி 9 பவுன் பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: