×

திருப்பூர் திருப்பூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே சங்க தேர்தல்

திருப்பூர், டிச.5: ரயில்வே துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களுக்கான கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெற்று தருவதற்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கம் மட்டுமே அணுக முடியும். 2007ம் ஆண்டு முதல் ரயில்வே தொழிற்சங்க தேர்தல் நடத்தப்பட்டு 30 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெரும் சங்கம் அங்கீகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டு அச்சங்கம் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டு கோரிக்கைகளை பெற்று வந்தது. 2013ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யு) தொழிற்சங்கம் 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில்வே வாரியம் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கான தேர்தலை அறிவித்தது. அதன்படி, நேற்று தொடங்கி மூன்று நாட்கள் ரயில்வே சங்க தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலைய அருகே ரயில்வே தொழிற்சங்கத்திற்கான தேர்தல் நேற்று துவங்கி நடைபெற்றது. திருப்பூரில் 341 பேர் வாக்காளர்களாக அங்கீகரிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்டோர் வாக்களித்தனர். தொடர்ந்து இன்றும் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இந்த தேர்தலில் தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்கம், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிங்சங்கங்கள் இடம் பெற்றுள்ளது.

ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்கள் இதில் வாக்களிக்க உள்ளனர். திருப்பூரில் உள்ள தொழிற்சங்கங்கள் தேர்தலுக்கு முன்பாகவே ரயில்வே தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து ஆதரவை திரட்டி வந்தனர்.

The post திருப்பூர் திருப்பூரில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே சங்க தேர்தல் appeared first on Dinakaran.

Tags : Tirupur Railway union election ,Tirupur ,union ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!