×

புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது

 

திருப்பூர், டிச.4: திருப்பூர் மத்திய போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர்.  அப்போது, ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடை ஒன்றில் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு அரசால் தடை செய்யப்பட்ட 2 கிலோ 100 கிராம் புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கிருந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர், ஆண்டிபாளையம் பகுதியை சேர்ந்த கருந்தமிழ் அழகன் (47) என்பதும், அவர் அப்பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கருந்தமிழ் அழகனை கைது செய்தனர்.

 

The post புகையிலைப் பொருட்கள் விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Tirupur Central Police Station ,Antipaliyam ,Dinakaran ,
× RELATED திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..!!