உலக மாற்று திறனாளிகள் தினம் முதல்வருடன் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர்

சென்னை:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநிலத்தலைவரும், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளி நல வாரிய உறுப்பினர் ரெ.தங்கம் தலைமையில் மாநில நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முதல்வரை சந்தித்த பின்னர் ரெ.தங்கம் அளித்த பேட்டி: அரசு துறையில் பணியாற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வு பெற டிஎன்பிஎஸ்சி நடத்தும் துறை தேர்வில் இருந்து விலக்கு மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு உட்பட்ட சாலைகளில் மாற்றுத்திறனாளிகள் கடை வைத்து வாழ்வாதாரத்தை காக்க அரசாணை வெளியிட்டுள்ளார்.அதற்காக முதல்ருக்கு மாற்றுத்திறனாளிகள் தினத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

* சவால்களை கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை
உலக மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்துக்கு மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்பதை இந்த ஆண்டுக்கான உலக மாற்றுத்திறனாளிகள் நாள் கருப்பொருளாக ஐக்கிய நாடுகளின் சபை அறிவித்துள்ளது.

அந்த வகையில், மாற்றுத்திறனாளர்களின் உரிமைகளையும் நலனையும் காப்பதுடன், அவர்கள் உயர்பதவிகளுக்குச் செல்ல வேண்டும், நல்ல வேலைவாய்ப்புகளைப் பெற வேண்டும் என்பதிலும் அக்கறை கொண்டு செயலாற்றி வருகிறது நமது திராவிட மாடல் அரசு. சவால்களைக் கடந்து வெல்வது மாற்றுத்திறனாளிகளின் சாதனை; அந்தச் சவால்களைக் களைவதே நம் கடமை.

The post உலக மாற்று திறனாளிகள் தினம் முதல்வருடன் மாற்றுத்திறனாளிகள் சந்திப்பு: வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்தனர் appeared first on Dinakaran.

Related Stories: