குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது; கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கன மழையைத் தொடர்ந்து.
பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நேரில் ஆய்வு செய்து வருகிறோம். நெல்லிக்குப்பம் பிரதான சாலையை ஒட்டி உள்ள எஸ்.குமாரபுரம், கலைஞர் நகர் போன்ற தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அதனை உடனே வெளியேற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்பேரில், மோட்டார்கள் மூலம் வெள்ள நீரை வெளியேற்றும் பணியை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளை இன்று அறிவுறுத்தினோம். என்று பதிவிட்டுள்ளார்.
The post கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை; துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு! appeared first on Dinakaran.