×

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பெஞ்சல் புயல் ஒன்றிய அரசு அவசர நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் நோட்டீஸ்

புதுடெல்லி: வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் தாக்குதலால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் குறிப்பாக புதுச்சேரி, கடலூர், விழுப்புரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடில் ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலும் நேற்று எதிரொளித்தது. இதில் திமுக தரப்பில் எம்பி டி.ஆர்.பாலு, மக்களவையில் அலுவல்களை தள்ளிவைத்து விட்டு பெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் குறித்த நோட்டீசை வழங்கி இருந்தார்.

இதேப்போன்று காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை மக்களவையில் வழங்கி இருந்தார். அதில், “பெஞ்சல் புயல் பாதிப்புகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதம் நடத்த வேண்டும். மேலும் புயல் பாதிப்புகளுக்காக உடனடியாக முதற்கட்ட அவசர தொகையாக ரூ.1000 கோடியை தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதேப்போன்று ஒன்றிய அரசு உடனடியாக மத்திய குழுவை புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

The post நாடாளுமன்றத்தில் எதிரொலித்த பெஞ்சல் புயல் ஒன்றிய அரசு அவசர நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தல்: மக்களவையில் திமுக, காங்கிரஸ் நோட்டீஸ் appeared first on Dinakaran.

Tags : Benjal ,Parliament ,Union Government ,DMK ,Congress ,Lok Sabha ,New Delhi ,Thiruvallur ,Kanchipuram ,Chengalpattu ,Cyclone Benjal ,Bay of Bengal ,Puducherry ,Cuddalore ,Villupuram ,Tamil Nadu ,
× RELATED பெஞ்சல் புயல், மழை பாதிப்பு நிவாரணமாக...