சிவகங்கை, டிச.3: சிவகங்கையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் புரட்சித்தம்பி தலைமை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆரோக்கியராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சகாயதைனேஸ் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாநில செயலாளர் கிருஷ்ணசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
மண்டல மாநில செயற்குழு உறுப்பினர் ஜீவாஆனந்தி, மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர், குமரேசன், ரவி, மாவட்ட துணை தலைவர்கள் மரியசெல்வம், அமலசேவியர், சேவியர் சத்தியநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் பஞ்சு ராஜ், கஸ்தூரி, முத்துகுமார், கல்வி மாவட்ட நிர்வாகிகள் ஜான் கென்னடி, ஜோசப், பாலகிருஷ்ணன், ஜெயக்குமார் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதில், காளையார்கோவில் ஒன்றியத்தில் சிறுபான்மை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த 23 மாதங்களாக ஊதியம் வழங்காததை கண்டித்து டிச.11 முதல் சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு appeared first on Dinakaran.