ராஜபாளையத்தில் பயனற்ற டயர்கள் பறிமுதல்: சுகாதார அலுவலர்கள் நடவடிக்கை

 

ராஜபாளையம், நவ.2: ராஜபாளையத்தில் பயன்றற டயர்களை சுகாதார அலுவலர்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்துவரும் நிலையில், பயன்றற பொருட்களில் மழைநீர் தேங்கி அதன் மூலம் சுகாதார கேடு ஏற்படுவதைத் தடுக்கும் விதமாகவும், ஒருமுறை பயன்படுத்தி எரியக்கூடிய பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜன் ஆணையின்படி, நகர் நல அலுவலர் டாக்டர் பரிதா வாணி தலைமையில் சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், டிபிமில் ரோடு மற்றும் மதுரை மெயின் ரோட்டில் உள்ள கார் ஒர்க் ஷாப்பில் பயனற்று இருந்த டயர்களை பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்று செயல் தொடர்ந்தால் அபராதங்கள் விதிக்கப்படும் எனவும், இது போன்ற நடவடிக்கைகள் நகர் பகுதியில் தொடர்ந்து நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

The post ராஜபாளையத்தில் பயனற்ற டயர்கள் பறிமுதல்: சுகாதார அலுவலர்கள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: