×

இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு

 

பல்லடம், டிச.2: பல்லடம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப்போவது அதிகரித்து வருவதால் அதனை போலீசார் தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பல்லடம் அருகே உள்ள லட்சுமி மில் பகுதியில் வருவாய்த்துறை ஊழியரின் மோட்டார் பைக் திருடப்பட்டது. அதே பகுதியில் மேலும் 2 மோட்டார் பைக்குகள் திருடப்பட்டுள்ளது. இதேபோல மாணிக்காபுரம், பனப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு போவது அதிகரித்து வருகிறது.

இதற்கிடையே நேற்று முன்தினம் பல்லடம் வடுகபாளையம் பகுதியில் மோட்டார் பைக் திருடப்பட்டது. தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடைபெற்றாலும் போலீசாரின் நடவடிக்கை சுணக்கமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், ‘‘திருடப்பட்ட வாகனங்களை சமூக விரோதிகள் குற்றச்சம்பவங்களுக்கு பயன்படுத்தி, வாகனம் பிடிபட்டால் வாகனங்களின் உரிமையாளர்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இருசக்கர வாகனங்கள் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post இருசக்கர வாகன திருட்டு அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Palladam ,Lakshmi Mill ,Dinakaran ,
× RELATED பல்லடத்தில் நாளை கடையடைப்பு வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு