பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது என ஒன்றிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். “சமூக நீதி அடிப்படையில் கைவினைஞர்களுக்கு அதிகாரம் தரும் வகையில் தமிழ்நாட்டுக்கு என விரிவான திட்டம் உருவாக்க முடிவு. தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டம், சாதி, குடும்பத் தொழில் வேறுபாடின்றி, மாநிலத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களுக்கும் முழு ஆதரவு அளிக்கும்” எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

The post பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: