மேலும் இதை மறைத்து அமெரிக்கர்களிடம் இருந்து அதிகளவிலான முதலீடுகளை பெற்றுள்ளதாகவும், இது அமெரிக்க சட்டத்துக்கு எதிரானது என்று கூறி நியூயார்க் பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அதானிக்கு எதிராக அமெரிக்க கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது. இது இந்திய அரசியலில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. தொழில் அதிபர் அதானியை கைது செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்ற இரு அவைகளும் கூடியது. இந்த கூட்டத்தில் மக்களவை எம்.பி. ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். அப்போது, எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவையில் கூச்சலும், குழப்பமும் காணப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், எதிக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; சிறையில் அடைக்கப்பட வேண்டிய அதானியை ஒன்றிய அரசு பாதுகாக்கிறது. அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தது. சிறு சிறு குற்றச்சாட்டுகளுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். பல ஆயிரம் கோடி முறைகேடு புகாரில் சிக்கிய அதானி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டியவர். தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்ப்பீர்களா, அதானி நிச்சயம் மறுக்கத்தான் செய்வார் என ராகுல் கூறினார்.
The post சிறையில் இருக்க வேண்டிய அதானியை ஒன்றிய அரசு பாதுகாக்கிறது.. அதானியை கைது செய்ய ராகுல் காந்தி வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.