×
Saravana Stores

ஸ்ரீ பெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை: டி.ஆர்.பாலு எம்.பிக்கு ஒன்றிய அமைச்சர் பதில்


சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய தொழிலாளர் நல அமைச்சர் கூறியுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் எம்பியும், நாடாளுமன்ற மக்களவை திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலு மக்களவையில், சென்னையை அடுத்தஸ்ரீபெரும்புதூரில் மருத்துவமனையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதா, அப்படி என்றால் அதன் முழு விவரங்கள் என்ன என்று கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே,‘‘ஸ்ரீபெரும்புதூரில் 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையை உடனடியாக அமைக்க இ.எஸ்.ஐ. நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

178 கோடி ரூபாயில் மருத்துவமனை வசதிகள் உருவாக்கப்படும். இது தொடர்பாக உரிய நிதி அனுமதி இ.எஸ்.ஐ. நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது. மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் மத்திய பொதுப்பணித் துறையின் பொறுப்பில் விடப்பட்டு அதற்கான ஆணையும் தரப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும்” என்று பதில் அளித்தார்.

The post ஸ்ரீ பெரும்புதூரில் 100 படுக்கைகள் கொண்ட இஎஸ்ஐ மருத்துவமனை: டி.ஆர்.பாலு எம்.பிக்கு ஒன்றிய அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : ESI Hospital ,Sri Perumputur ,Union Minister ,DR ,Balu ,CHENNAI ,Union Labor ,Minister ,Sriperumbudur ,Parliamentary Lok Sabha ,DMK ,Committee Leader ,DR Balu ,bed ,Sri Perumbudur ,Union ,
× RELATED அந்தமான் அருகே ரூ36 ஆயிரம் கோடி...