×
Saravana Stores

தரமற்ற பொருளை திரும்பப்பெற மறுப்பு; வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் ரூ10,000 இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் ஆணையம் உத்தரவு

மும்பை: கோரேகாவைச் சேர்ந்த தருணா ராஜ்புத் என்ற பெண் கடந்தாண்டு அக்டோபர் மாதம், பிளிப்கார்ட்டில் ரூ4,641 மதிப்புள்ள ஹெர்பலைப் நியூட்ரிஷன் பிரஷ் என்ற ஊட்டச்சத்து பானத்தை ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு டெலிவரி செய்யப்பட்ட பொருட்கள் தரமற்று இருந்ததை கண்டறிந்த பெண், வாடிக்கையாளர் எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது ‘விற்ற பொருட்களை திரும்பப் பெற இயலாது’ என்ற கொள்கை காரணமாக அந்த பொருட்களை திரும்பப் பெற முடியாது என்றும் பணத்தை திருப்பித் தர முடியாது என்றும் விற்பனையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பெண், மும்பை புறநகர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஆணையம், பிளிப்கார்ட் நிறுவனம் அதன் தளத்தில் விற்கப்படும் பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெண் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொண்ட போதிலும் அவருக்கு பணம் திருப்பி அளிக்கப்படவில்லை. தரமற்ற பொருளை திரும்பப் பெறாதது நியாயமற்ற வர்த்தக நடைமுறையை கடைபிடிப்பதற்கு சமமாகும். தரம் இல்லாத பொருட்கள் திரும்பப் பெறப்படாவிட்டால், அதற்கான தொகையை பெற வாடிக்கையாளருக்கு உரிமை உண்டு. எனவே பிளிப்கார்ட் நிறுவனமும் விற்பனையாளரும் பெண்ணுக்கு ₹10,000 இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பெண் ஆர்டர் செய்தற்கான ₹4,641 தொகையையும் இருவரும் சேர்ந்து திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டது.

The post தரமற்ற பொருளை திரும்பப்பெற மறுப்பு; வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் ரூ10,000 இழப்பீடு வழங்க வேண்டும்: நுகர்வோர் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Flipkart ,Consumer Commission ,MUMBAI ,Taruna Rajput ,Gorega ,Dinakaran ,
× RELATED அமேசான், பிளிப்கார்ட் வணிகர்கள் மீது...