×
Saravana Stores

மசூதி ஆய்வால் கலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பிய சம்பல்


சம்பல்: உத்தரப்பிரதேசத்தின் சம்பலில் வன்முறை வெடித்த இரண்டு நாட்களுக்கு பின் நேற்று இயல்பு நிலை திரும்பியது. உத்தரபிரதேச மாநிலம் சம்பல் நகரில் முகலாயர் காலத்து மசூதியில் நீதிமன்ற உத்தரவின்பேரில் தொல்​லியல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்​கொள்​வதற்காக சென்றனர். ஆய்வு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு திரண்டு இருந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு பின் அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.

பள்ளிகள் மீண்டும் செயல்படத்தொடங்கியது. அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டன. எனினும் இணையசேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. பதற்றமான பகுதிகளில் அதி விரைவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வருகிற 30ம் தேதி வரை வெளியாட்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சம்பல் வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும் மசூதியை சுற்றியுள்ள பகுதிகள் ஆள்நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. அதிகாரிகள் மற்றும் போலீசார் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

The post மசூதி ஆய்வால் கலவரம்: இயல்பு நிலைக்கு திரும்பிய சம்பல் appeared first on Dinakaran.

Tags : Sambal ,Chambal ,Uttar Pradesh ,Mughal ,
× RELATED சம்பல் மாவட்டத்துக்குள் வெளிஆட்கள் நுழைய தடைவிதிப்பு!