- Sankaranko
- தோத்துக்குடி காவல் நிலையம் அட்டு
- Sankaranarayana
- சுவாமி
- கோவில்
- சங்கரநாராயண சுவாமி கோயில்
- சங்கரங்கோ
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உண்டியல் பணத்தை எண்ணும் போது திருடிய தூத்துக்குடி போலீஸ் நிலைய ஏட்டு மற்றும் 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலும் ஒன்று. இங்கு தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலில் ஒவ்வொரு மாதமும் 20ம்தேதிக்கு மேல் கோயிலில் உள்ள உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பணம் எண்ணப்படுவது வழக்கம். உண்டியல் எண்ணும் பணி முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்படும்.
இந்நிலையில் நேற்று சங்கரநாராயண சுவாமி கோயிலில் துணை ஆணையர் கோமதி முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த பெண்கள் 4 பேர் பணத்தை திருடியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோயில் அவுட் போஸ்ட் போலீசார் சந்தேகத்திற்கு இடமான 4 பெண்களை பிடித்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மகளிர் போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரியும் மகேஸ்வரி (42) மற்றும் சங்கரன்கோவில் அருகே உள்ள கோ.மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (65), மல்லிகா (31), மாரியம்மாள் (40) ஆகியோர் ஒன்றாக இணைந்து உண்டியல் பணம் எண்ணும் போது ரூ.17,710ஐ திருடியது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குபதிந்து உண்டியல் பணம் திருட்டில் ஈடுபட்ட ஏட்டு மகேஸ்வரி மற்றும் 3 பெண்களை கைது செய்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவிலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post கோயிலில் உண்டியல் பணத்தை திருடிய தூத்துக்குடி பெண் ஏட்டு உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.