×
Saravana Stores

ஐயப்பன் அறிவோம் 11: மகிஷி வதம்

மகிஷியின் சகோதரனான மகிஷாசூரன், தேவர்கள், இந்திரன், முனிவர்களை துன்புறுத்துகிறான். மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்க்கை மகிஷாசூரனை வதம் செய்து கொன்று விடுகிறார். தன் சகோதரன் கொல்லப்பட்டதால் ஆத்திரமடைந்த மகிஷி, தேவர்கள், இந்திரன், முனிவர்களை பழி வாங்க துடிக்கிறார். ஆனால், அவர்களுடன் சாதாரணமாக போரிட்டு வெற்றி பெறமுடியாது என எண்ணி, முற்பிறவில் முனிவப் பெண்ணாக இருந்ததாலும் தவத்தில் சிறந்தவர் என்பதாலும் சாகாவரம் வேண்டி கடும் தவம் புரிகிறார்.

தவத்தின் பயனாக தன் முன் தோன்றிய பிரம்மனிடம் மரணமில்லா வாழ்வு வேண்டும் என கேட்கிறார். இறப்பு இயற்கை என்பதால், சாகாவரத்தை தவிர மற்றதை கேள் என்கிறார் பிரம்மன். இயற்கையில் இது சாத்தியமில்லை என்ற புத்திசாலித்தனத்தோடு, இருந்த போதிலும் இரண்டு ஆண்களுக்கு பிறக்கும் குழந்தையால் தான் தனக்கு முடிவு (மரணம்) வேண்டும் என்ற வரத்தை கேட்கிறார். பிரம்மனும் அப்படியே வரம் அளிக்கிறார்.

இதனையடுத்து அசுர பலம் புரிந்தவராக ஆகிறார் மகிஷி. வரம் பெற்றதும், முதல்வேலையாக தேவர்கள், இந்திரன், முனிவர்களை துன்புறுத்த துவங்குகிறார். தேவலோக தலைவன் இந்திரனுடன் போரிட்டு தேவலோகத்தையும் கைப்பற்றி அங்கு அரசியாக முடிசூட்டிக் கொள்கிறார். இதனால் தேவலோகத்தை இழந்து செய்வதறியாது தவிக்கிறான் இந்திரன். தேவர்கள் மகிஷியுடன் போர்புரிய முடிவு எடுத்து, பிரம்மனிடம் ஆலோசனை கேட்கிறார்கள், அப்போது மகிஷி பெற்ற வரம் குறித்து விளக்குகிறார் பிரம்மன்.

இதனையடுத்து மகிஷியை எளிதில் போரிட்டு வெல்ல முடியாது என அறிந்தவுடன், பிரம்மனுடன் சேர்த்து சிவன், விஷ்ணுவிடம் முறையிடுகிறார்கள். இந்திரனே, முன்ஜென்மத்தில் உனது கர்வத்தால் ஏற்பட்ட கர்மாவை அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதி. இருந்த போதிலும் தேவலோகத்தை காப்பாற்ற வேண்டிய கடமை உள்ளது. முற்பிறவியில் மூன்று தேவிகளின் அம்சமான முனிவப் பெண்ணான லீலாவதி, கடும் தவத்தால் பெற்ற வரத்தின் பலத்தால் மகிஷியாக இப்படி சர்வ வல்லமையுடன் இருக்கிறார்.

எனவே விதியை மீற முடியாது. ஆனால், பலம் பொருந்திய மகிஷியை அழித்து, சாப விமோசனம் அளிப்பதற்கு சாஸ்தாவால் மட்டுமே முடியும். சாஸ்தா, மணிகண்டனாக அவதாரம் எடுத்து மகிஷியை வதம் (மகிஷியின் ஆணவம் அழிப்பு) செய்து சாபவிமோசனம் தந்து ஐயப்பனாக அவதாரம் புரிவார். எனவே சாஸ்தா, மணிகண்டனாக அவதாரம் எடுக்கும் நேரம் வந்துவிட்டது என கூறுகின்றனர் சிவனும், பெருமாளும். சாமியே சரணம் ஐயப்பா (நாளையும் தரிசிப்போம்).

* சபரிமலையில் நாளை
அதிகாலை
3.00 நடை திறப்பு
3.05 நிர்மால்ய தரிசனம்
3.15-11.30 நெய்யபிஷேகம்
3.25 கணபதி ஹோமம்
காலை
7.30 உஷ பூஜை
நண்பகல்
12.30 உச்சிகால பூஜை
1.00 நடை அடைப்பு
மாலை
3.00 நடை திறப்பு
6.30 தீபாராதனை
இரவு
7.00 புஷ்பாபிஷேகம்
10.30 இரவு பூஜை
10.50 அரிவராசனம்
11.00 நடை அடைப்பு

The post ஐயப்பன் அறிவோம் 11: மகிஷி வதம் appeared first on Dinakaran.

Tags : Ayyappan Sabatham ,Makishi Vatham ,Makishi ,Makishasuren ,Indra ,Mahishasur'an ,Ayyappan Tanavom ,
× RELATED ஐயப்பன் அறிவோம் 12: மகிஷியின் மகன்